Thursday, 26 July 2012

ரூ.200 கட்டாததால் பச்சிளம் குழந்தை சாவு!

ரூ.200 கட்டாததால் பச்சிளம் குழந்தை சாவு!

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில்,குழந்தையை இங்குபேட்டரில் வைக்க ரூ.200 கொடுக்கதாதால், பிறந்த 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள அரசு பொது மருத்துமனையில் பெண் ஒருவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை ஒன்று பிறந்தது.இதனால் அக்குழந்தையை சில நாட்கள் இங்குபேட்டரில் வைத்து பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக மருத்துவமனை நிர்வாகம் ,அக்குழந்தையின் தந்தையிடம் இங்குபேட்டருக்கான் மின்சார கட்டணமாக ரூ.200 பணம் கட்ட சொல்லி கேட்டுள்ளனர்.

ஆனால் அக்குழந்தையின் தந்தையோ பெயிண்டராக கூலித்தொழில் செய்பவர். அதனால் அந்த பணத்தை கட்டமுடியவில்லை.

இருப்பினும் அக்குழந்தையின் பெற்றோர், டாக்டர்களிடம் எவ்வளவோ கெஞ்சியும் குழந்தையை இங்கு‌பேட்டரில் வைக்க மறுத்துவிட்டனர். இதனால் பிறந்த 5 நாட்களே ஆன அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

ரூ.200-க்காக பச்சிளம் குழந்தை ஒன்று இறந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே ஆபத்தான நிலையில் தான் பிறந்ததாகவும்,அதனால் தான் உயிரிழந்ததாககவும் கூறியுள்ளனர்.

இருப்பினும் அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, அக்குழந்தையின் தந்தையிடம் முறைப்படி புகார் அளிக்குமாறு கேட்டுள்ளார்.புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்

No comments:

Post a Comment